ஹட்டன்-  குடாகம - ருவான்புற பகுதியில் கேராளா கஞ்சாவுடன் நான்குபேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே கைது செய்யப்பட்டதாகவும்.

 குறித்த நபர்கள் ஹட்டன் - குடாகம - ருவான்புற பகுதியை சேர்ந்த 25மற்றும் 30வயதுடைய இளைஞர்கள் எனவும் குறித்த  கேரளா கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள்  இன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் அஜர்படுத்தப்பட உள்ளதாக ஹட்டன் பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் அதிகாரிகள்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.