அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது பேரக் குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

62 வயதான லீமோனிய செக் என்ற மூதாட்டி தனது வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுகளிலிருந்து ஏழு மற்றும் எட்டு வயதுடைய குழந்தைகளை திறந்துவிடும் அதிர்ச்சி காணொளி இணைத்தில் வெளியாகியுள்ளது. 

இந்தக் காணொளியை பார்வையிட்ட பொலிஸார் குறித்த சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, பாட்டி வேனில் இடமில்ல‍ை எனக் கூறி மிகவும் சிறிய ஒரு கூண்டில் தங்களை அடைத்து வைத்து பயணித்ததாகவும், லீமோனி ஏசி கூட போடாமல் வேனின் ஜன்னல்களை மூடி வைத்திருந்ததாகவும் அக் குழந்தைகள் கூறினர். 

எனவே விசரணையின் பின்னர் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய லீமேனியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.