(எம்.நேசமணி)

மார்ச் மாதத்தில் கைத்­தொழில் பொருட்­களின் ஏற்­று­ம­தி 10.5 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதுடன் சரா­சரி ஏற்­று­மதி 6.3 சத­வீ­தத்தால் உயர்ந்துள்ளது. மார்ச் மாத கைத்­தொழில் பொருட்­களின் ஏற்­று­மதி வரு­மானம் 1.1 பில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது. இதனால்  வர்த்­தகப் பற்­றாக்­குறை 1 பில்­லி­ய­னுக்குக் குறை­வாக வீழ்ச்சியடைந்தது.

ஏற்­று­மதி 7.7 சத­வீ­தத்தால் உயர்­வ­டைந்து 2.9 பில்­லியன் டொல­ராக 2018 முதல் காலாண்டில் காணப்­பட்­ட­தாக இலங்கை மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது.

முன்னெப்போதும் இல்லாதவாறு சாத­னை­ யாக மார்ச் மாதத்தில் வணிகப்­பொ­ருட்கள் ஏற்­று­ம­தியில் 1.108 மில்­லியன் டொலர் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி 7.4 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 486 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது.

இறப்பர் பொருட்கள் ஏற்­று­மதி 11.8 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 85.8 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது. மாணிக்­கக்கல் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி 91.9 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 38.7 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது.

விவ­சா­யப்­பொ­ருட்கள் ஏற்­று­மதி 5.6 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்து 138.5 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது.

தேயிலை ஏற்­று­மதி 3.6 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 138.5 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது. மேலும் இறப்பர், தெங்கு, வாசனைத் திர­வியம் ஆகியவற்றின் ஏற்­று­மதி வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்­டது. கட­லு­ணவு ஏற்­று­மதி 3.3 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்து 28 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது.

கைத்­தொழில் பொருட்கள் ஏற்­று­ம­தியின் கீழ்­வரும் ஆடை ஏற்­று­மதி நவம்பர் 2013 க்கு அடுத்தபடி­யாக மார்ச் 2018 இல் மிகவும் அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. ஐரோப்­பாவுக்கான ஆடை ஏற்­று­மதி சிறி­த­ளவு வீழ்ச்­சி­ய­டைந்தும் அமெ­ரிக்­கா­வுக்­கான ஆடை ஏற்­று­மதி அதி­க­ரித்தும் காணப்­பட்­டது.

மாணிக்கம், இரத்­தி­னக்கல், ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி மார்ச் 2018 இல் அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. மரக்­கறி, பழ­வ­கைகள், பொதி செய்­யப்­பட்ட கடலை வகை ஏற்­று­மதி அதி­க­ரித்துக் காணப்­பட்­டது.

இயந்­தி­ரங்கள் மற்றும் இயந்­திரம் சார் பொருட்கள் ஏற்றுமதி அதி­க­ரித்துக் காணப்­பட்­டன. போக்­கு­வ­ரத்து உப­க­ர­ணங்கள் ஏற்­று­மதி மார்ச் 2018 இல் வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்­டது.

புகை­யிலை, தேயிலை தவிர்ந்த விவ­சாய உப பிரி­வுப்­பொ­ருட்கள் ஏற்­று­மதி மார்ச் 2018 இல் சரி­வ­டைந்து காணப்­பட்­டது.

தேயிலை ஏற்­று­மதி உயர் விலை­யி­னாலும் அதிகளவில் ஏற்­று­மதி இடம் பெற்­ற­தாலும் உயர்­வ­டைந்து காணப்­பட்­டது. கராம்பு, கறுவா ஏற்­று­மதி சரி­வ­டைந்து காணப்­பட்­டது. தெங்குப்பொருள் ஏற்­று­ம­தியும் சரி­வ­டைந்து காணப்­பட்­டது. கால­நிலை சீர்­கேட்டால் உற்­பத்தி குறை­வ­டைந்­ததால் தெங்கு ஏற்­று­மதி  சரி­வ­டைந்­தது.

இலங்­கையின் விற்­பனைப் பொருட்­களின் பிர­தான ஏற்­று­மதி நாடுகளாக அமெ­ரிக்கா, ஐக்­கிய ராஜ்­ஜியம், இந்­தியா, ஜெர்­மனி மற்றும் இத்­தாலி ஆகியன விளங்­கின. இங்கு 52 சத­வீத ஏற்­று­மதி இடம்­பெற்­றது.

மார்ச் 2018 இல் இறக்­கு­மதி செல­வினம் 1979 மில்­லியன் டொல­ராக அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. இத்­தொகை மார்ச் மாதம் 2017 உடன் ஒப்­பி­டு­கையில் குறைவாகும்.

மார்ச் மாதத்தில் இடை­நிலைப் பொருட்­களும் அடுத்­த­தாக நுகர் பொருட்­களும் இந்த இறக்­கு­மதி அதி­க­ரிப்­புக்குக் கார­ண­மா­யின.

மார்ச் 2017 இல் மசகு எண்ணெய் இறக்­கு­மதி செய்­ததால் மார்ச் 2018 இல் எரி­பொருள் இறக்­கு­மதி அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. சுத்­தி­க­ரித்த பெற்றோல் மற்றும் நிலக்­கரி விலை உயர்வு இறக்­கு­ம­தியில் தாக்கம் செலுத்­தி­யது.  மார்ச் 2018 இல் தங்க இறக்­கு­மதி மிகவும் அதி­க­மாக இடம்­பெற்றிருந்­தது. இரும்பு மற்றும் அலு­மி­னிய இறக்­கு­மதி குறைந்து காணப்­பட்­டது. ஆடை மற்றும் ஆடை சார்ந்த பொருட்கள் இறக்­கு­ம­தியும் குறை­வாகக் காணப்­பட்­டது. நுகர்வோர் பொருட்­களில் மார்ச் 2018 இல் வாகன இறக்­கு­மதி மிகவும் அதி­க­மாகக் காணப்­பட்­டது.

மார்ச் மாதம் 2017 உடன் ஒப்­பி­டு­கையில் இது இரு மடங்கு அதி­க­ரிப்­பாகும். சீனி அதி­க­ளவு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டதால் இவ்வாறு அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. 

பெரும்­போக அறு­வடை சிறப்­பாக இருந்­ததால் அரிசி இறக்­கு­மதி குறை­வாகக் காணப்­பட்­டது. மார்ச் 2018 இல் 71 மில்­லியன் கிலோ­கி­ராமும் மார்ச் 2017 இல் 140 மில்­லியன் கிலோ கிராமும் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது.

முத­லீட்டுப் பொருட்கள் பிரிவில் அநே­க­மாக எல்லா உப பிரி­வு­களின் இறக்­கு­மதியும் குறை­வ­டைந்து காணப்­பட்­டது. இந்­தியா, சீனா, ஜப்பான், ஐக்­கிய அரபு எமிரட்ஸ் மற்றும் சிங்­கப்­பூரிலிருந்து 53% வீத இறக்­கு­மதி இடம்­பெற்­றுள்­ளது. மத்­திய பங்கு பரி­வர்த்­தனை நிலை­யத்தில் வெளி­நாட்டு முத­லீடு 35.7 மில்­லியன் டொல­ராக மார்ச் 2018 இல் காணப்­பட்­டது.

அரசின் நீண்­ட­காலக் கடன் 58.6 மில்லியன் டொலரை மார்ச் 2018 இல் ஈட்டியது. 

இம்மாதத்தில் கடன் மீள் செலுத்துதல் கடன் உள் வருகையை விட அதிகமாக காணப்பட்டது. மொத்தம் அரச கையிருப்பு அந்நிய செலாவணி 7.3 பில்லியன் டொலராகக் காணப்பட்டது. இது சுமார் 4 மாத இறக்குமதிக்கு சமனானதாகும்.

மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் 9.6 பில்லியன் டொலராகும். இது 5.3 மாதங்களுக்கான இறக்குமதியை உள்ளடக்க போது மானதாகும். 31 மே 2018 இல் இலங்கை ரூபா 3.3 சதவீதம் டொலருக்கு எதிராக தேய் மானமடைந்து காணப்பட்டது.

வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கை ரூபா தேய்மானமடைந்து காணப்பட்டது. இதற்கு உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலர் வலுவடைந்தமை காரணமாகும்.