சிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி

Published By: Rajeeban

11 Jun, 2018 | 10:16 PM
image

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார்.

இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.

அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ் என்ற ஆடம்பரஹோட்டலிற்குள் நுழைவதை ஊடகவியலாளர்கள் பார்த்துள்ளனர்.

இதன் பின்னர் சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் பாலகிருஸ்னன் கிம் ஜொங் அன்னுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் கிம் சிங்கப்பூரை சுற்றி பார்த்த தகவல் இடம்பெற்றுள்ளது.

மரினா பே சான்ட்சிலிருந்து வெளியேறி கிம் வீதியில் நடப்பதை காண்பிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.தனது மெய்பாதுகாவலர்களுடன் காணப்படும் அவர் சிரித்தபடி காணப்படுகின்றார்.

கிம்மை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்ச்சியில் சிங்கப்பூர்வாசிகள் அவரை வரவேற்றுவாழ்த்தியுள்ளனர்.

உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் அந்த சந்திப்பிற்கு முன்னர் கிம் சிங்கப்பூர் வீதிகளில் வலம் வந்துள்ளார்.

இதேவேளை டிரம்ப் உச்சிமாநாட்டிற்கு முந்தைய இரவை எப்படி செலவிடுகின்றார் என்பது குறித்து எந்த தகவலும்; வெளியாகவில்லை.

டிரம்பும் கிம்மும் சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு கப்பெலா ஹோட்டலில் சந்திக்கவுள்ளனர்.

கமராமுன் கைகுலுக்கிய பின்னர் இருவரும் தனிப்பட்ட சந்திப்பில் மொழிபெயர்ப்பாளர்கள் துணையுடன் ஈடுபடவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17