"எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் ஆனா தேச துரோகியா இருக்கிறது தான் தப்பு" என்ற சூப்பரான பஞ் வசனத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சென்ரிமெண்ட், அதிரடி, ஆக்ஷன் மற்றும் ரொமேன்ஸ் போன்ற காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் சேகர் கபூர், வஹீதா ரஹ்மான், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஆனந்த் மகாதேவன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.