ஆப்னானிஸ்தானின் காபுல் நகரில்  இன்று அடுத்தடுத்து மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளதோடு 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பட்டு அமைச்சகத்தின் நுழைவு வாயிலின் அருகே இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இன்று ஒரே நாளில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். 

அந்நாட்டில், இன்று காலை நேஹ்கான் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு மேற்கொண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.