(இரோஷா வேலு) 

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடகம்முல்ல பகுதியின் தனியார் ஹோட்டலொன்றில் மறைமுகமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், ‍ஹோட்டலின் முகாமையாளர் உட்பட ஏழு பேரை கைதுசெய்துள்ளனர். 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்கவே சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் 36 வயருடைய ஹோட்டலின் முகாமையாளரையும் ஏனைய ஆறு பெண்களையும் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண்கள் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 30 தொடக்கம் 45 வயதுக்கிடைப்பட்டவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இவர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.