கலேவெல -  வுகாப்பிட்டி பிரதான வீதியியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது உயிரிழந்த மூவரது சடலங்களும் கலேவெல வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பான மேலதிக  விசாரனைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .