(இராஜதுரை ஹஷான்)

15 ஆவது பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடானது இன்று முதல் நாளை மறுதினம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடலினை விருத்தியடைய செய்து மக்கள் மத்தியில் முறையாக நெறிப்படுத்துவதும், எதிர்காலங்களில் தொடர்பாடல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இம் மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.