யுத்தம் நடைபெற்றக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு வகை கைக்குண்டொன்றை எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனபுர திக்வெவ பகுதியில் கண்டெடுத்துள்ளதாக எப்பாவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியினூடாகப் பாயும் கலா ஓயாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபரொருவரின் வீச்சு வலையில் மாட்டிய குறித்த கைக்குண்டு பற்றி எப்பாவெல பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபின் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களின் உதவியுடன் இக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதுடன் இக்குண்டு இப்பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எப்பாவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.