முதலாவது போட்டியிலேயே மண்டியிட்டது இலங்கை

Published By: Vishnu

11 Jun, 2018 | 11:03 AM
image

இலங்கைக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்று வரும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 226 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

அந்த வகையில் கடந்த 6 ஆம் திகதி போர்ட் ஒவ் ஸ்பெயினில் ஆரம்­ப­மா­னது. இப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்தார். 

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி தனது முதல் இன்­னிங்ஸில் 154 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 414 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­டத்தை நிறுத்திக் கொண்­டது. 

டாவ்ரிச் 125 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். சுரங்க லக்மால் 2 விக்­கெட்­டுக்­க­ளை வீழ்த்­தினார். 

இதை­ய­டுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்­னிங்ஸில் 55.4 ஓவர்­களில் 185 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க ளையும் இழந்­தது. 

தொடர்ந்து மேற்­கிந்­தியத் தீவுகள் அணி இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆடி­யது. 72 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 223 ஓட்­டங்­களை எடுத்த நிலையில் ஆட்­டத்தை நிறுத்திக் கொள்­வ­தாக மே.இ.தீவுகள் அறி­வித்­தது. 

இலங்கை அணி வெற்றி பெற 453 ஓட்­டங்கள் இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. 

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்­கா­வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழப்­புக்கு 176 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. குசல் மெண்டிஸ் 94 ஓட்­டங்­க­ளுடன் சிறப்­பாக ஆடிக்­கொண்­டி­ருந்தார். 

இந் நிலையில் நேற்று ஐந்தாம் நாள் ஆட்டம் ஆர்பமான சிறிது நேரத்தில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து 102 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஏனயை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 83.2 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 226 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுக்களையும்,தேவேந்திர பிஷு 3 விக்கெட்டுக்களையும் ஷானோன் காபிரியல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதையடுத்து, 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனான ஷேன் டாவ்ரிச் தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்குமான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31