சீனாவின் ஷாங்காய் நகரில் இடம்பெற்ற பேச்சிவார்த்தையில் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

தென் கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘பி.ஆர்.ஐ.’ என்னும் பட்டுப்பாதை திட்டத்தை சீனா நிறைவேற்ற உள்ளது.

அனைத்து நாடுகளுக்கும் பயன் அளிக்கும் திட்டம் இது என சீனா தெரிவித்தாலும் ஆசிய பிராந்தியத்தில் சீனா தன் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கிலேயே இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக இந்தியா கருதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது..

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சீனா சுமார் 80 நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கிங்தாவோ நகரில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் 2 வது நாள் நிறைவில் குறித்த திட்டம் தொடர்பான பிரகடனமொன்று முன்வைக்கப்பட்டது..

அப் பிரகடனதிற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம்வைத்துள்ள ரஷியா, பாகிஸ்தான், கஸகஸ்தான், உஸ்பகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒப்புதல் வழங்க பொழுதும் இந்தியா ஒப்புதலளிக்க மறுத்துள்ளது..