மைத்திரி, மஹிந்த, சமல் மேல் மாடியில் பேச்சுவார்தை நடத்தினர் : மஹிந்த விரும்பி பதவியை வழங்கினார்

Published By: MD.Lucias

22 Feb, 2016 | 02:50 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்திப் பெறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ  விரும்பியே வழங்கினார். இதற்கு  சாட்சி முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆவர் என அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார். 

நாங்கள் நபர்களில் தங்கியிருக்கவில்லை எமக்கு முக்கியம் கட்சியே ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டபூர்வமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரானார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒரு நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு தனி வாகனத்தில் வந்தார். இதன் போது அங்கு மஹிந்த ராஜபக்ஷவும் இருந்தார் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் அங்கிருந்தனர்.

பின்னர் மைத்திரி, மஹிந்த, சபாநாயகர் சமல் ராஜபக்  ஆகியோர் இல்லத்தின் மேல் மாடிக்கு சென்று பேச்சுதவார்த்தைகளை நடத்திய பின்னரே கட்சி தலைமைப் பதவியை மஹிந்த மைத்திரிக்கு வழங்கினார். 

இதற்கு சாட்சி சபாநாயகர் சமல் ராஜபக் ஷ ஆவார். எவரும் அச்சுறுத்தல் விடுத்து கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவில்லை. 

அன்றைய தினம் மேல் மாடியிலிருந்து மைத்திரியும் மஹிந்தவும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தனர். 

கீழே இறங்கி வந்த பின்னர் எமக்கு மத்தியில் மஹிந்த மைத்திரிக்கு தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறும் உத்தியோகத்தர்கள் குழுவை அமைக்குமாறும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47