ரமழான் பண்டிகையை முன்னிட்டு அப்கானிஸ்தானில் மூன்று நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து  வெளியிடுகையில்,

ரமழான் பண்டிகையை முன்னிட்டு நங்கள் மூன்று நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்கின்றோம். ஆனால் வெளிநாட்டு படைக்கு எதிரான எங்களது தாக்குதல் தொடர்ந்த வண்ணமே இருக்கும். 

அத்துடன் எங்களின் தரப்பை பாதுகாத்துக் கொள்ள எந்தவிதமான தாக்குதலையைும் தொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். 

2001 ஆம் ஆண்டு அமெரிக்க படையெடுப்புக்கு பின் தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்தமை இதுவே முதற் தடவையாகும்.