யாழில் இன்று கண்டன பேரணியும் கத­வ­டைப்பும்

Published By: Vishnu

11 Jun, 2018 | 08:14 AM
image

(ரி.விரூஷன்)

யாழ்ப்­பாணம்,வட­ம­ராட்சி கிழக்கில் மேற்கொள்­ளப்­பட்டு வரும் சட்­ட­வி­ரோ­த­மான கட­லட்டை தொழில்முறையை உடன் நிறுத்தி அதில் ஈடு­ப­டு­வோரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்தி இன்­றைய தினம் யாழில் கத­வ­டைப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

இச் சட்­ட­வி­ரோத தொழில் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்­றைய தினம் காலை 8.30 மணி­ய­ளவில் யாழ். மாவட்ட செய­ல­கத்தை நோக்கி மாபெரும் கண்­டனப் பேர­ணியும் இடம்­பெ­ற­வுள்­ளது.

யாழ்.மாவட்ட கடற்றொழி­லாளர் சமா­சங்­களின் சம்­மே­ள­ன­மா­னது ஏற்­பாடு செய்­துள்ள இக்  கத­வ­டைப்பு மற்றும் கண்­டன பேரணி தொடர்­பாக அவ் அமைப்பின் தலைவர் வே.தவச்­செல்வன் கேச­ரிக்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

வட­ம­ராச்சி கிழக்கு மரு­தங்­கேணி பிர­தே­சத்தில் தென்­னி­லங்­கையை சேர்ந்த ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மீன­வர்கள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கட­லட்டை பிடிக்கும் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இந்­நி­லையில் இச் சட்­ட­வி­ரோத தொழிலில் ஈடு­ப­டு­வோரை கைது செய்து அதனை தடுத்து நிறுத்­து­மாறு அப் பகுதி மீனவ மக்கள் தொடர்ச்­சி­யாக அதி­கா­ரி­களை கோரி வந்­தி­ருந்­தனர்.

அதி­கா­ரி­களும் தொடர்ச்­சி­யாக அம் மக்­களின் கோரிக்­கை­களை நிரா­க­ரித்து சட்­ட­வி­ரோத தொழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களை கண்டும் காணாதும் போன்று அலட்­சி­ய­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை யாழ்.கடற்­தொ­ழிலில் நீரியல் வளத்­துறை திணைக்­க­ளத்தின் நிர்­வாக செயற்­பாட்டை முடக்கி முற்­றுகை போராட்டம் நடத்­தி­யி­ருந்தோம். இதன்­போது சட்­ட­வி­ரோத முறையில் கட­லட்டை தொழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களை  வெள்­ளிக்­கி­ழமை இரவு தொடக்கம் ஞாயிற்­றுக்­கி­ழமை இர­வுக்குள் பெரு­ம­ள­வா­ன­வரை கைது செய்­வ­தாக அதி­கா­ரிகள் உறு­தி­மொழி வழங்­கி­ய­தை­ய­டுத்து நிர்­வாக முடக்கல் போராட்டம் தற்­கா­லி­க­மாக கைவி­டப்­பட்­டது.

அதி­கா­ரிகள் தாம் கொடுத்த உறு­தி­மொ­ழியை நட­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. இந்­நி­லை­யி­லேயே அதி­கா­ரி­க­ளது செயற்­பாட்­டிற்கு  எதிர்ப்பு தெரி­வித்தும், உட­ன­டி­யாக சட்­ட­வி­ரோத கடற்­தொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களை கைது செய்ய வலி­யு­றுத்­தியும் இன்­றைய தினம் கண்­டன பேர­ணிக்கும் கத­வ­டைப்­புக்கும் அழைப்பு விடுத்­துள்ளோம்.

இதன்­படி இன்­றைய தினம் காலை முதல் நண்­பகல் ஒரு மணி வரை இக் கத­வ­டைப்­புக்கு அனைத்து வியா­பார நிலை­யங்­களும், சந்­தை­களும், தனியார் நிறு­வ­னங்­களும் ஆத­ர­வ­ழிக்க வேண்டும் எனவும், தமது நிறு­வ­னங்­களின் முன்­பாக கறுப்புக் கொடி­களை தொங்­க­விட்டும் போராட்­டத்­திற்கு வலுச் சேர்க்­கு­மாறும்  கேட்­டுக்­கொள்­கின்றோம்.

ஏற்­க­னவே இக் கண்­டன போராட்­டத்­திற்கு வடக்கின் முல்­லை­தீவு, மன்னார், கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களை சேர்ந்த கடற்­தொ­ழி­லாளர் கூட்­டு­றவு சம்­மே­ள­னங்கள் ஆத­ர­வ­ளிப்­ப­தாக கூறி­யுள்­ளன. இவை தவிர யாழ்.பல்­க­லை­க­ழக மாணவர் ஒன்­றியம், தனியார் பேரூந்து சங்கம், பொது அமைப்­புக்கள் போன்­ற­னவும் இதற்கு ஆத­ரவு தரு­வ­தாக தெரி­வித்­துள்­ளன.

 இன்று காலை 8.30 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் கடற்­தொ­ழி­லாளர் சம்­மே­ள­னத்தின் முன்­பி­ருந்து மாபெரும் கண்­டன பேர­ணி­யா­னது யாழ்.மாவட்ட செய­லகம் வரை செல்லும். இவ்­வாறு செல்லும் பேர­ணி­யா­னது மாவட்ட செய­லகம் முன்­பாக கண்­டன கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்டு பின்னர் சட்­ட­வி­ரோத கட­லட்டை தொழிலை நிறுத்த கோரிய கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜ­ரினை மாவட்ட அரச அதி­ப­ரிடம் கைய­ளிப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19