தேர்தல்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தது எப்போது?

Published By: Rajeeban

11 Jun, 2018 | 07:12 AM
image

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவது அவசியம் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் மூன்று ஊழல் மோசடி மிகுந்த தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் 1999 இல் வடமேல் மாகாணசபை தேர்தல்,1982 சர்வஜன வாக்கெடுப்பு,1981 இல் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் ஆகியவையே இலங்கையின் வரலாற்றில்  மோசமானவை எனவும் தெரிவித்துள்ளார்.

1981 இல் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் அற்ற  வெளிமாவட்டத்தவர்களை அரசாங்கம் ஈடுபடுத்தியது,இதன் காரணமாக வாக்குப்பெட்டிகள் பல காணாமல்போயின, பின்னர் சில கண்டுபிடிக்கப்பட்டன என தேர்தல் ஆணையாளர் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த தேர்தல் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல்கள் மீது நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்தது ,வாக்கு சீட்டிற்கு பதில் துப்பாக்கி குண்டுகள் என்ற நிலைமை உருவாக காரணமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் 1983 கலவரமே வடக்கில் ஆயுதக்குழுக்கள் பலப்படுவதற்கான காரணம் என கருதுகின்றனர் எனினும் நான் 1981 மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலே இந்த குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தையிட்டது  என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள  தேர்தல் ஆணையாளர் 1982 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இளைஞர்களை பிரதிநிதித்துவம் செய்த கட்சிக்கு   1983 பாராளுமன்ற தேர்தலில் ஐந்து அல்லது ஆறு ஆசனங்கள் கிடைக்க கூடிய வாய்ப்பிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இளைஞர்களிடமிருந்து இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது அவர்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்தார்ர்கள்,அந்த நிலைமை அவர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலையை உருவாக்கியது 60,000 பேர்வரையில் கொல்லப்பட்டனர்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தேவையற்ற பொருத்தவமற்ற விதத்தில் தேர்தல்களை பிற்போடுவது  வன்முறையையும் உயிரிழப்புகளையும் கொண்டுவருகின்றது என்பது தெளிவாகின்றது.

மாகாணசபைகளிற்கு உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்துவது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30