ரஷ்யாவில் கெஸ்ப்ரோம் நட்புறவு கால்பந்தாட்டம் : 211 நாடுகளைச் சேர்ந்த 422 சிறுவர்கள் பங்கேற்பு

Published By: Priyatharshan

11 Jun, 2018 | 05:26 AM
image

(நெவில் அன்தனி)

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ ஸ்பார்ட்டெக் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தில் நடைபெற்றுவரும் கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்ந்தாட்டம் நிகழ்ச்சியில் இலங்கை மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களான தினுக்க பண்டாரவும் மொஹமத் அயான் சதாத்தும் பங்குபற்றுகின்றனர்.

இவர்கள் இருவரும் இந் நிகழ்ச்சியில் இலங்கையின் இளம் தூதுவர்களாக பங்குபற்றுகின்றனர். இவர்களில் அயான் சதாத் இளம் ஊடகவியலாளர்களில் ஒருவராக பங்குபற்றுவதுடன் அவர் தயாரித்த கட்டுரை இளம் ஊடகவியலாளர்கள் அமர்வுக்கு தெரிவாகியுள்ளது. இது இலங்கைக்கும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்துக்கும் பெருமை தரும் விடயமாகும்.

கெஸ்ப்ரொம், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கம் ஆகியன இணைந்து இந் நிகழ்ச்சியை ஆறாவது தடவையாக நடத்துகின்றபோதிலும் இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர்கள் இருவர் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கான ஆரம்ப வைபவமும் பயிற்சியும் மொஸ்கோவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் 211 நாடுகளையும் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்குபற்றுகின்றனர்.

இந்த சிறுவர்கள் 32 அணிகளாக பிரிக்கப்பட்டு நட்புறவ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ளனர். லயன் அணியில் தினுக்க பண்டார கோல்காப்பாளராக தெரிவாகியுள்ளார். 

இவர்கள் இருவரும் நட்புறவு, சமத்துவம், நேர்மை, சுகாதாரம், சமாதானம், அர்ப்பணிப்பு, வெற்றி, பாரம்பரியம், மதித்தல் ஆகிய ஒன்பது பெறுமதிமிக்க பண்புகளை உள்ளடக்கிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்திலும் ஏனைய நாடுகளின் சிறுவர்களுடன் பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று ஆரம்ப வைபவத்தையும் தொடர்ந்து நடைபெறவுள்ள ரஷ்யாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியையும் கண்டுகளிக்கவுள்ளனர்.

இவர்களுடன் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவரும் பயிற்றுநருமான ஒகஸ்டின் ஜோர்ஜ், பயிற்சியகத்தின் சர்வசேத விடயங்களுக்கான பணிப்பாளரும் ஆலோசகருமான முஹீத் ஜீரான் ஆகியோரும் ரஷ்யா சென்றுள்ளனர். 

மொஹமத் அயான் சதாத், றோயல் கல்லூரியில் தமிழ் மொழிமூல வகுப்பில் கல்வி பயின்று வருவதுடன் தினுக்க பண்டார, நுகேகொடை புனித சூசையப்பர் கல்லூரி மாணவராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41