மக்களின் நன்மைக்காக எவ்வித திருத்தமும் மேற்கொள்ளவில்லை - ஞானசார

Published By: Vishnu

10 Jun, 2018 | 03:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தமது தேவைகளுக்கு மாத்திரமே அரசியலமைப்பில் திருத்தங்களை உருவாக்கி கொள்கின்றதே தவிர மக்களின் நலன் குறித்து இதுவரை காலமும் எவ்வித அரசியல் திருத்தங்களையும் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தவில்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கங்கள் தமது தேவைகளையும் அரசியல் இருப்பினையும் தக்க வைத்துக்  கொள்வதற்காகவே அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு  அரசியலமைப்பு தொடர்ந்து மாற்றமடையும் போது அரசியலமைப்பின் தன்மை எந் நிலையில் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெது எதிரணியினர் முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவை களத்தில் இறக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை முன்னாள் ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தத்தில் காணப்படுகின்றது. ஆனால் 18 ஆவது திருத்தம் இவருக்கு சாதகமாகவே உள்ளது.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலினை நடத்தி பொது எதிரணி ஆட்சி கைப்பற்றி 18 ஆவது திருத்தத்தினை மீண்டும் அமுல்படுத்தவே முயற்சிக்கின்றது. ஆனால் மறுபுறம் தேசிய அரசாங்கமும் தற்போது தேர்தல் தொடர்பில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந் நிலையில் அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகள்  தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கிணங்க திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51