தலவாக்கலை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வட்டகொட, மடக்கும்புர பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததனால் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன் குறித்த இரண்டு வீடுகளிலும் உள்ள 11 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரம் முறிந்து விழந்த காரணத்தில் அப் பகுதிக்கான மின்சார துண்டிக்கப்பட்டுள்ளதுடன் திருத்த பணிகளில் மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.