ப்யூக்கர்ஸ் நோயிற்கான சிகிச்சை

Published By: Robert

22 Feb, 2016 | 01:37 PM
image

அதிகப்படியான புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளா னவர்களுக்கு த்ராம்போ ஆங்கிட்டிஸ் ஓப்ளிடெரன்ஸ்' (Thromboangiitis obliterans) அல்லது பியூர்கர்ஸ் நோய் என்றழைக்கப்படும் டி.ஏ.ஓ. நோய் ஏற்படுகிறது

இந்த நோய் முதலில் விரல்களைப் பாதித்து பிறகு படிப்படியாக கை, கால்களுக்குப் பரவும். நோய் தீவிரமானால் ரத்தப் போக்கு இல்லாமல் கை, கால்கள் அழுகி, வெட்டி எடுக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம். அதிகமாக புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருள்களை உட்கொள்வதாலும் ரத்த நாளங்களும், நரம்புகளும் சுருங்கி வலுவிழக்கும். பின் ரத்த நாளங்களிலும், நரம்புகளிலும் ரத்த அடைப்பு ஏற்படும். எனவே ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு விரல்களில் வீக்கமும் வலியும் ஏற்படும். பிறகு புண்கள் ஏற்பட்டு அழுக ஆரம்பிக்கும்.

இத்தகைய நோய் தாக்கிய இடத்தில் முதலில் சிறிய அளவில் வலி இருக்கும். ஆரம்பத்தில் விட்டு விட்டு வரும் வலி, பின்னர் தொடர்ந்து இருக்க ஆரம்பிக்கும். பாதித்த பகுதி வலுவிழந்து காணப்படும். நரம்புகளில் வீக்கம், புண்கள் தோன்றுவது, குளிர் காலங்களில் விரல்கள் வெளுத்துக் காணப்படுவது போன்ற அறி குறிகள் தென்படும். இதுபோன்று காணப்பட்டால் உடனடி யாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

பொதுவாக "பியூர்கர்ஸ்' நோய் என்றழைக்கப்படும் இந்த நோய், 20 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. அண்மைக் காலமாக பெண்களும் ஆங்காங்கே இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் அதிகமாக புகை பிடித்தல், புகையிலைப் பொருள்களை உட்கொள்வது, பதப்படுத்தாத புகையிலையை உபயோகப்படுத்துவது, c போன்றவற்றைப் புகைப்பது போன்றவையே இந்த நோய் ஏற்படக் காரணங்களாகின்றன.

தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியா, இலங்கை, வங்கதேசத்திலும் டி.ஏ.ஓ. நோய் அதிகமாகக் காணப்படுகிறது.

இது புகையிலை பழக்கமிருக்கும் மக்களில், மேற்கு ஐரோப்பாவில் 0.5 முதல் 5.6 சதவீதம், போலந்தில் 3 சதவீதம், ஜேர்மனியில் 6.7 சதவீதம், செக்கோஸ்லாவியாவில் 11.5 சதவீதம், யூகோஸ்லோவியாவில் 39 சதவீதமும் இந்தியாவில் இதைக் காட்டிலும் கூடுதலாக 45 முதல் 63 சதவீதம் வரையும் பாதிப்பு இருப்பதாக ஒரு சர்வதேச அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இவ்வித நோயால் பாதிக்கக்கப்பட்டவர்களுக்கு, அதிகம் பாதிப்படைந்த பாகங்களை நீக்குவது என்பதே இதற்கான சிறந்த சிகிச்சையாகும். ஆனால் 'டிஸ்டிராக்ஷன் ஓஸ்ட்டியோ ஜெனிஸிஸ்' என்ற சிகிச்சை முறையில் நல்ல பலன் கிடைக்கும்.

இது 'இலிசராவ்' என்கிற ரஷ்ய முறை மருத்துவ சிகிச்சையாகும். இந்த முறையில் எலும்புகளுக்கிடையில் சிறு இடைவெளி மாற்றம் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்தும், புண்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை மூலம் பல நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால் கை, கால்கள் துண்டிப்பிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள்.

டாக்டர் கே.சண்முகசுந்தரம்,

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04