செவ்வாய்க் கோளில், உயி­ரி­னங்கள் உள்­ள­னவா என்ற கேள்­விக்கு இது­வரை தெளி­வான பதில் எத­னையும் அறி­வியல் வழங்­க­வில்லை. எனினும் இது குறித்துக் கவ­லை­கொள்­ளாது, செவ்வாய்க் கோளில் மனிதக் குடி­யேற்­றங்களை ஏற்­ப­டுத்தும் அடுத்த கட்­டத்­திற்கு அறி­வியல் உலகம் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

விண்­வெ­ளியை ஆக்­கி­ர­மிக்கும் நோக்கில் நாடு­க­ளுக்­கி­டையில் பனிப்போர் மூண்­டுள்­ளது. இக்­கா­ர­ணத்­தினால், அமெ­ரிக்கா, ரஷ்யா, ஐரோப்­பிய ஒன்­றியம், இந்­தியா எனப் பல நாடுகள் செவ்வாய்க் கோள் குறித்த ஆய்­வு­களில் ஏட்­டிக்குப் போட்­டி­யாகத் தம்மை இணைத்­துக்­கொண்­டுள்­ளன. இவ்­வே­ளையில் தனியார் நிறு­வ­னங்­களும் தமது வர்த்­தகப் பரப்­பினை விண்­வெளி வரை நீ­டிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளன.

விண்­வெளிச் சுற்­றுலா, விண்­வெளித் தொழிற்­சா­லைகள் மற்றும் விண்­பொ­ருட்­க­ளி­லான மனிதக் குடி­யேற்­றங்கள் என்­ப­வற்றில் உதவும் வகையில், தமது ஆய்­வு­களை விசா­ரித்து வரு­கின்­றனர். இவ்­வா­றான வர்த்­தகப் போட்­டி­களும் விண்­வெளி ஆய்வில் ஆரோக்­கி­ய­மான போட்­டி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இதே­வேளை, 2020 ஆம் ஆண்­ட­ளவில் அமெ­ரிக்­காவின் நாஸா அனுப்பத் திட்­ட­மிட்­டுள்ள செவ்வாய்க் கோள் நோக்­கிய ஆய்வு விண்­ப­ய­ணத்தில், உலங்கு வானூர்தி ஒன்றும் இணைத்து அனுப்­பப்­பட முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. 

செவ்­வாயின் மேற்­ப­ரப்பு மற்றும் வான்­ப­ரப்பு என்­பவை தற்­போது அறி­வியல் சாத­னங்­களின் கூர்­மை­யான பார்­வைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றது. இது­வ­ரையில் ‘பாத் பைண்டர்’ மற்­றும்‘­ஒப்­போ­சூ­னிற்றி’ மற்றும் ‘கியூயோ­சிற்றி’ ஆகிய தன்­னி­யக்க வாக­னங்கள் செவ்வாய்க் கோளின் மேற்­ப­ரப்பில் காணப்­ப­டு­கின்­றன. இவற்றில், ‘கியூரியோ­சிற்றி’ அங்கு ஆற்றும் பணிகள் தொடர்பில் அவ்­வப்­போது செய்­திகள் வெளி­யா­கின்­றன. 

இதே­வேளை, செவ்­வாயின் வான்­ப­ரப்பில் அமெ­ரிக்­காவின் ‘மாவென்’ செய்­மதி மற்றும் ‘மங்­கள்யான் போன்­றவை அக்­கோ­ளினை வலம்­வந்து கொண்­டி­ருக்­கின்­றன. அங்கு ஆய்வுப் பணி­களை மேற்­கொள்ளும் தன்­னி­யக்க வாக­னங்­களின் பார்­வைப்­புலம் மேற்­ப­ரப்­புக்கு மிக அண்­மை­யாக அமையும் அதே­வேளை, செய்­ம­தி­களின் பார்வை செவ்­வாய்க்­கோளின் மேற்­ப­ரப்­பி­லி­ருந்து சேய்­மை­யாக அமை­கின்­றன. எனவே, இவ்­விரு பார்­வைப்­பு­லங்­க­ளுக்கும் இடைப்­பட்ட பறவைப் பார்­வைப்­

புலன் நோக்­கு­கை­யினை ஆய்வுச் சாத­னங்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கில், செவ்­வாயில் உலங்கு வானூர்தி ஒன்­றினைப் பறக்க வைக்கும் திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்பிடதக்கது.