கடந்த வியாழக்கிழமை அதிகாலையில்  தலைமன்னார் கடற்கரையில் இருந்து நண்டு வலை பயன்படுத்தி ஒரு பைபர் படகில்  மீன்பிடிக்க சென்ற கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு மீனவர்கள் கரை திரும்பாததால் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களின் உறவினர்கள்  மனு அளித்தனர்.

மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மூலம் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில்  தீவிர  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையிடையே இன்று  அதிகாலை அரிச்சல்முனை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களிடம் தலைமன்னார் மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை விசாரித்தாக தனுஷ்கோடி மீனவர்கள்  மெரைன் போலிஸாரிடம்  தகவல்  வழங்கியுள்ளனர்.