இன்றைய திகதியில் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடற்பருமன் என்ற பிரச்சி னையை எதிர்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடின்மை, உடற்பயிற்சியின்மை, கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுப் பொருளை தொடர்ந்து சாப்பிடுவது என பல காரணங்களால் உடற்பருமன் ஏற்படுகிறது.

அண்மையில் வயிற்றில் உள்ள சில வேண்டாத பாக்டீரியாக்கள் கூட ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்புகளான கல்லீரல் செயல்பாட்டில் மாற்றத்தினை உருவாக்கி, உடற்பருமனை தோற்றுவிப் பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

உடற்பருமனுக்காக இதுவரை பேரி யாட்ரிக் சத்திர சிகிச்சை, சுப்பர்பிஷியல் லைப்போலக் ஷன் சிகிச்சை என பல சிகிச்சைகள் அறிமுகமாகி பலருக்கு பலனை அளித்து வருகின்றன. இருப் பினும் உடற்பருமனுக்கான சிகிச்சை குறித்த ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் எண்டாஸ்கோப்பி முறையில் உடல் பருமனுக்கு நவீன இன்ட்ரா கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை என்ற நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக மனிதர்களுக்கு உடல் பருமன் மற்றும் அதனை சார்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே உடல் பருமனை ஆரம்ப நிலையிலேயே கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான உணவு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு அவ சியம். ஒருவரது உடல் எடை பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிலை குறியீட்டு எண் மூலம் அவர்களது உயரத்தோடு தொடர்புபடுத்தி கணக்கிடப்படுகிறது. பொதுவாக பி.எம்.ஐ. 20 முதல் 23 வரையில் இருக்க வேண்டும். ஆனால் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. 28 முதல் 35 வரையில் காணப்படும். மேலும் பி.எம்.ஐ. 35 முதல் 40-க்குள் உள்ளவர்களுக்கு ரத்த கொதிப்பு, நீரிழிவு, இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இப்பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது இல்லாமல் இருந்தாலோ, பி.எம்.ஐ. 40 க்கு மேல் உடையவர்களுக்கு லெப்பிராஸ்கோப்பி மூலம் சத்திர சிகிச்சை செய்து கொள் ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதே தருணத்தில் பி.எம்.ஐ. 28 முதல் 35 வரை உள்ளவர்களுக்கு உணவு மற்றும் உடல் பயிற்சிகள் பலன் அளிக்காத போது, அவர்களுக்கு சிறப்பாக பலன் அளிக்கும் வகையில் எண்டாஸ்கோப்பி மூலம் நவீன இன்ட்ரா கேஸ்ட்ரிக் சிகிச்சை என்ற நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது, எண்டாஸ்கோப்பி உதவியுடன் பலூன் வடிவிலான பொருள் ஒன்று வயிற்றுக்குள் கொண்டு செல்லப்பட்டு நிறமேற்றம் செய்யப்பட்ட சலைவன் திரவத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. அவ்வாறு நிரப்புவது மூலம் வயிற்றின் கொள்ளளவு குறைக்கப்படுகிறது.இதனால் குறைந்த அளவு உணவிலேயே வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது.

இவ்வித சிகிச்சையின் மூலம் 4 முதல் 6 மாதங்களில் உடல் எடையை குறைக்க முடியும். மேலும் மயக்க மருந்து கொடுக்க முடியாத அளவிற்கு உடல் பருமன் பிரச்னை கொண்டவர்களுக்கு முதல் 6 மாதம் பலூன் சிகிச்சை முறை மூலம் குறிப்பிட்ட அளவு எடைக் குறைப்பு செய்து பின்னர், லெப்ராஸ்கோப்பி மூலம் சத்திரசிகிச்சையை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

மேலும் இச் சிகிச்சையானது, சத்திரசிகிச்சை இல்லா மல் எண்டாஸ்கோப்பி மூலம் செய்யக் கூடிய எளிய சிகிச்சை முறை என்பதால், உணவுப் பாதையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. அதனால் நோயாளியின் இயல்பு வாழ்க்கை எந்தவகையிலும் பாதிக்கப்படாது.

டாக்டர் P.S.ராசன்

தொகுப்பு: அனுஷா