உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டிரைலர் ஜுன் 11 ஆம் திகதியன்று மாலை 5 மணியளவில் வெளியாகவிருக்கிறது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த டிரைலரை தமிழில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிடுகிறார்.

இதில் சேகர் கபூர், வஹீதா ரஹ்மான், ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஆனந்த் மகாதேவன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 

முதல் பாகத்தில் நடித்த இவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனலுடன், இந்த படத்தை முதலில் தயாரித்த ஓஸ்கர் பிலிம்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது.

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு கமல்ஹாசனின் விஸ்வரூபம்=2 வெளியாகவிருப்பதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.