வெளிநாடுகளில் ஆவின் பால் விற்பனை செய்வது தொடர்பாக நடிவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக மாநில பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சிவகாசியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழக அரசின் பால் விற்பனை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் செய்யப்படவில்லை என கூறும் தகவல்கள் தவறு. 

அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தரமில்லாத பால்தான் கொள்முதல் செய்யப்படவில்லை. உலக நாடுகளில் ஆவின் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 அண்மையில் கூட ஹொங்கொங்கில் ஆவின் பால் கிடைக்குமா? என்று கேட்டார்கள். வளைகுடா நாடுகளில் விரைவில் ஆவின் பால் விற்பனை தொடங்கப்படும். இந்த பட்ஜட்டில் பால்வளத்துறைக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஆவின் விற்பனையகம் தொடங்கப்படும். 

தமிழகத்தில் ஆறு இடங்களில் ஆவின் பொருட்கள் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. விருதுநகரில் ரூ.10 கோடி செலவில் இந்த தயாரிப்பு நிலையம் அமைக்கப்படும்.’ என்றார்.