முக்கிய வேடத்தில் குட்டி வெள்ளை பன்றி நடிக்கும் “ஜெட்லீ“

Published By: Robert

22 Feb, 2016 | 01:12 PM
image

ஆடு முக்கிய வேடத்தில் நடித்த “ஆட்டு கார அலமேலு, மாடு“ நடித்த “கோமாதா என் குல மாதா“ யானை நடித்த நல்ல நேரம், அன்னை ஒரு ஆலயம், கும்கி, பாம்பு நடித்த நீயா, வெள்ளிக்கிழமை விரதம், நாகம், ஈ முக்கியமாக நடித்த நான் ஈ, கோழி நடித்த ஆடுகளம், கழுதை பங்கேற்ற பஞ்ச கல்யாணி, நாய் நடித்த நாய்கள் ஜாக்கிரதை, குதிரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அழகர் சாமியின் குதிரை போன்ற படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது.

இவைகளை தொடர்ந்து குட்டி வெள்ளை பன்றி முக்கிய கதாபாத்திரம் ஏற்று ஜெட்லீ என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறது. நகைச்சுவை நாயகர்களாக நடிக்கிறார்கள் கண்ணன் பொன்னையா, ஜெகன் சாய் இருவரும். கௌதம் மேனன் உதவியாளராக பணியாற்றியவர் கண்ணன் பொன்னையா.

கதாநாயகிகளாக என்னை அறிந்தால், உத்தமவில்லன் படங்களில் நடித்த பார்வதி நாயர், விஜய் ஆண்டனி நடிக்கும் சைத்தான் படத்தில் நடிக்கும் அருந்ததி நாயர் இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் பவன், மிப்பு, ஸ்டன்ட் நரேன் ஆகியோர் நடிக்கிறார்கள். 

மக்களுக்கு அறியாமை தலை விரித்தாடுகிறது. அபசகுனம், சுபசகுனம் என்று சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்து மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை காசாக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டா தான் “ஜெட்லீ“

ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப்  படத்தில் பணிபுரிகிறார்கள். நார்னியா, லயன் போன்ற படங்களின் மாடல் அனிமேட்டர் இதில் பணிபுரிகிறார்.

மிக உயரிய தொழில்நுட்பத்துடன் ஜெட்லீ உருவாகிறது. காமெடிதான் படத்தின் உயிர் நாடி. சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் இயக்குனர் ஜெகன் சாய்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35