தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி முன்னோடி பரீட்சைக்கான விண்ணப்பங்களை 14ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் கோரியுள்ளது.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் வருடம் தோரும் தரம் 05 புலமை பரிசில்  பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்தும் முன்னோடி பரீட்சை இம்மாதம் 23 ஆம் திகதி அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

எனினும் இதுவரை விண்ணப்பங்களை அனுப்பாத பாடசாலைகள் விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஆசிரியரின் உறுதிப்படுத்தலோடு இம் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறும்.

 சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இதுவரை விண்ணப்பிக்காத பெருந்தோட்ட பாடசாலைகள் 0777305450,அல்லது 0770222894 ஆகிய இலக்கங்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பி வைக்குமாறும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் கோரியுள்ளது.