பிர­பல கர்­நா­டக சங்­கீதக் கலைஞர் ஸ்ரீ.ஆரூரன் அரு­நந்தியின் தொடர்ச்­சி­யான 48 மணி­நேரம் இன்­னிசைக் கச்­சேரியின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை வெள்­ள­வத்தை, சைவ மங்­கையர் கழக வித்­தி­யாலய மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது. 

சைவ மங்­கையர் கழகம், ஆரோஹணபைன் ஆர்ட்ஸ் போரம் ஆகியன இணைந்து வழங்கும் 

"அதி­நீள கர்­நா­டக இசை மரதன்" (Longest Carnatic Singing Marathon) என்னும் தொடர் இசை நிகழ்வு நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.30 மணி வரை தொட­ரி­சை­யாக இடம்­பெ­ற­வுள்­ளது.