உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு

Published By: Robert

22 Feb, 2016 | 12:34 PM
image

காத்தான்குடி பிரதேசத்தில் உணவு தயாரிக்கும் கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவு விஷமானதன் காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 71 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதில் மேலதிக சிகிச்சைக்காக 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்தார்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள இவ் உணவு நிலையத்தில் நேற்று முன் தினம் வழங்கப்பட்ட புரியாணி உணவு விஷமானதால் முதல் நாள்  குழந்தைகள், பெரியோர்கள் உட்பட 57 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இதில் 7 பேர் இன்று காலை சிகிச்சை பெற்று வெளியேறியதோடு 50 பேர் தொடந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 11 வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைக்காக, சோதனையின் போது பெறப்பட்ட உணவுகளை பரிசோதனை செய்வதற்காக இரு சுகாதார உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு ஒன்று இன்று காலை கொழும்பு நோக்கி பயணமானார்கள் என்று தெரிவித்தார்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31