“பல்கலையில் இடம்பெறும் சில செயற்பாடுகளின் பின்னணியில் பாதாள உலகக்கோஷ்டியினர், அரசியல்வாதிகள் உள்ளனர்”

Published By: Priyatharshan

09 Jun, 2018 | 06:04 AM
image

(ஆர்.யசி)

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற போதைப் பொருள் பாவனை மன்றும் பாலியல் இலஞ்சம் கோரும் நிலைமைகளின் பின்னணியில் பாதாள உலக கோஷ்டிகள் மற்றும் அரசியல்வாதிகேள உள்ளனர் என உயர்கல்வி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜெனரல் சேர் ஜொன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சட்டமூல திருத்த விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் பரவி வரும்போதைப்பொருள் பாவனையால் இளம் சமூகம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் என்றும் இல்லாதா  அளவில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வடக்கின் அரசியல் வாதிகள் பல காரணிகளை கூறி வருகின்றனர். ஆனால் வடக்கின் இளம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து வடக்கின் இவர்கள் பேசுவதில்லை. 

இன்று வடக்கில் மட்டுமல்ல, நாடில் சகல இடங்களிலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. பல இடங்களின் போதைப்பொருள் பிடிபடுகின்றது, ஆனால் பிடிபட்ட நபர்களுக்கு என்ன நடந்தது, குடு போதைப்பொருள் எங்கே என்ற கேள்வி உள்ளது. இவை மிகவும் பாரதூரமான விடயமாகும். இன்று பல பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

 கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் மற்றும் அதனுடன் கூடிய குற்றங்களாக 267 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.  இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ள போதைப் பொருள் காரணமாக சில மோசமான சம்பவங்களும் இடம்பெறுவதாக எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளது. பாலியல் இலஞ்சம் கோரி பெண் பிள்ளைகளை அச்சுறுத்துவதாக ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  மீது தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைத்துள்ளது. அவர் குறித்து விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுமே உள்ளது. ஆகவே போதைப்பொருள் கடத்தல், பாவனை மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்த செயற்பாடாகும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக கட்டுப்படுத்த வேண்டும் இதில் பொலிஸ் செயற்பாடுகள் முக்கியமானது. 

பொலிஸ் சுயாதீனமாக  இயங்க வேண்டும். ஆனால் அதில் கேள்வி உள்ளது, எனினும் இவற்றை கவனதில் கொண்டு செயற்பட வேண்டும். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பரவல் அரசியல் வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின்  முழுமையான தொடர்பிலேயே இயங்கி வருகின்றது. 

பாதாள உலக கோஷ்டிகள் அரசியல் வாதிகளின் தயவு இல்லாது இவர்களால் செயற்பட முடியாது. பாரிய சம்பவங்கள் இடம்பெற்று குற்றவாளியாக கைதுசெய்யப்படும் நபர்கள் விரைவில் இலகுவாக விடுதலையாகி மீண்டும் அதே குழப்பங்களை செய்து வருகின்றனர். இதன் பின்னணி பலம்பொருந்தியதாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04