உருஹஸ்மன்ஹந்தவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேச சபையின்  பிரதி தவிசாளரான டொனால்ட் சம்பத் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.