(எம்.சி.நஜிமுதீன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஐ.தே.க.வின் நிறைவேற்றுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மங்கள சமரவீர அக்கட்சியின் உதவித் தவிசாளராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்  பிரதித் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.