கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்தவர் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கும் பொலிஸார் 19 வயதுடைய நபரெனவும் குறிப்பிட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.