காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் குறுவை அறுவடைக்காக  ஜுன் மாதம் 12 ஆம் திகதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாது என்று தமிழக சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் சட்டபேரவையில் இன்று 110 ஆவது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார்.

அதில், ‘இந்த ஆண்டு ஜுன் 12 ஆம் திகதி குறுவை அறுவடைக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படாது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 39.42 அடியாக இருப்பதால் நீர் திறக்க முடியாது ’என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள்.