பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'யார் ? இவர்கள்' என பெயரிட்டுள்ளார்கள்.

காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருப்பவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது யார் இவர்கள்? என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருக்கிறார்.

 புதுமுகங்கள் அஜய், கிஷோர், அபிராமி ஆகியோருடன் கடுகு புகழ் சுபிக்ஷா  ஆண்டவன் கட்டளை புகழ் வினோதினியும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதன் பின்னணியை யதார்த்தமான உலகியல் நடைமுறையுடன் விவரித்திருக்கிறேன். விரைவில் இப்படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்டம்  வெளியிடப்படும் என்றார்.