(எம்.எம். சில்வெஸ்டர்)

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் அமாஷா டி சில்வா நூலிழையில் தங்கப்பபதக்கத்தை தவறவிட்டார். 

இவர் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 11,71 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப்பதக்கத்தை வென்றெடுத்தார்.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.55 மணிக்கு பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. 

இப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் அமாஷா டி சில்வா தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுதியை பதிவு செய்து (11.71 செக்கன்கள்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

சீனாவின் லூலூ பெங் (11.68 செக்) தங்கப்பதக்கத்தை சுவீகரித்துடன், ஜப்பானின் மேய் கொடாமா (11.98 செக்.) வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.

ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இலங்கைக்கு ஒரு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்திருந்தன.