கோழிக்கறிக்காக தாயை கொலை செய்த மகன்!!!

Published By: Digital Desk 7

08 Jun, 2018 | 01:30 PM
image

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்த 45 வயதான பிஜம் கிஷோர் என்ற நபருக்கு  திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

கிஷோர் மது பழக்கத்திற்கு அடிமையாகி  தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதால் மனைவி தனது குழந்தைகளுடன் கிஷோரை விட்டு பிரந்து சென்று விட்ட நிலையில் தாய் மாரியம்மாவுடன் கிஷோர் வசித்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கோழியுடன்வீட்டுக்கு வந்த கிஷோர் தனக்கு கோழிக்கறி தயார் செய்து வைக்கும்படி தாயிடம் கூறிவிட்டு மது அருந்த சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் மது போதையில் கிஷோர் வீட்டுக்கு வந்து கோழிக்கறி வேண்டும் என தாயிடம் கேட்ட போது தான் இன்னும் சமைக்கவில்லை என தாய் கூறியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த கிஷோர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாயை சரமாரியாக குத்தி துடிதுடிக்க கொலை செய்து விட்டு அங்கிருந்து கிஷோர் தப்பியோடியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் தாயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு மகனையும் தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47