வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்களிடமிருந்து சட்டவிரோதமான  தடை செய்யப்பட்ட  தங்கூசி வலைகளும், படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரிச் செய்கை  அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவித்ததாவது,

இன்று காலை உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட  தங்கூசி வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்டுள்ள மூவரையும் கைது செய்துள்ளதாகவும் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.