தலவாக்கலை பகுதியில் தொடர்சியாக பெய்த கடும் மழையால்  தலவாக்கலை – ஹொலிரூட் கிழக்கு தோட்ட பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்தமையினால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தால்  4 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் 24  பேர் பாதிக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள்  சேதமாகியுள்ளது.

குறித்த சம்பவம்  நேற்று  மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்க ஹொலிரூட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தோட்ட முகாமையாளர் தெரிவித்தார். 

இதேவேளை சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஹொலிரூட் கிழக்கு பிரதேசத்தில் பெருக்கெடுத்த நீர் தேங்கி இருந்ததாகவும் பின்னர் படிப்படியாக தேங்கி இருந்த நீர் வழிந்தோடியுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.