( எம். எம். சில்வெஸ்டர்)

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் வல்லவர் போட்டியில் இலங்கையின் கனிஷ்ட மெய்வல்லுநர்களான அருண தர்ஷன, பசிந்து கொடிகார, அமாஷா டி சில்வா, தில்ஷி குமாரசிங்க ஆகிய நால்வரும் தத்தமது போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் வல்லவர் போட்டி ஜப்பானின் கிபு நகரில் நேற்று ஆரம்பமானது. இப் போட்டியில்  35 நாடுகளிலிருந்து 437 பேர் போட்டியிடுகின்றனர். இலங்கை சார்பாக 5 வீரர்களும், 7 வீராங்கனைகள் அடங்கலாக 12 பேர் பங்குபற்றுகின்றனர்.

இவர்கள் நால்வருமே நேற்று  இடம்பெற்ற தங்களது தகுதிகாண் போட்டிகளில் முதலிடத்தை பெற்றனர். இதில் அமாஷா டி சில்வா பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் (11.80 செக்கன்கள்) தனிப்பட்ட சிறந்த நேரப்பெறுதியை பதிவு செய்தார்.

அமாஷா டி சில்வா, தில்ஷி ஷியாமலி குமாரசிங்க, அருண தர்ஷன, பசிந்து கொடிகார ஆகியோர் தத்தமது போட்டி நிகழ்வுகளின் இறுதிப் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.

இவர்கள் இலங்கைக்கு பதக்கம் வென்றுகொடுப்பார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது.