இரட்டைக் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி

Published By: Vishnu

08 Jun, 2018 | 10:06 AM
image

ஈராக்­கிய தலை­நகர் பாக்­தாத்­தி­ல் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு  அரு­கி­லுள்ள ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் நேற்று முன்­தினம்  புதன்­கி­ழமை பின்­னி­ரவு இடம்­பெற்ற இரட்டைக் குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­களில்  குறைந்­தது 17 பேர் பலி­யா­ன­துடன் 35  பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

ஆயுதக் குழு­வொன்றால் வீடொன்றில் அந்தக் களஞ்­சி­ய­சாலை செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­த­தாக  சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் கூறினார்.

அங்கு  ஏவு­க­ணைகள் மூலம் ஏவப்­படும் குண்­டுகள்  மற்றும் ஷெல் குண்­டுகள் உட்­பட கனரக ஆயு­தங்கள்  வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அவர் தெரி­வித்தார்.

உயி­ரி­ழந்­த­வர்­களில் சிறு­வர்­களும் பெண்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.

ஷியா இனத்­த­வர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சாட்ர் நகரில் இடம்­பெற்ற இந்தப் பாரிய குண்டு வெடிப்­பு­களால் அந்த ஆயுதக் களஞ்­சி­ய­சாலை மற்றும் அதற்கு அரு­கி­லி­ருந்த பள்­ளி­வாசல் மற்றும் கட்­ட­டங்­களும்  வாக­னங்­களும் கடும் சேதத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளன. 

இந்­நி­லையில் இந்த வெடிப்பு சம்­பவம் குறித்து பிராந்­திய அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக  அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி பள்­ளி­வா­ச­லுக்கு ஷியா மத­கு­ரு­வான முக்­தாடா அல் சாட்ரின் ஆத­ர­வா­ளர்கள்   அடிக்­கடி விஜயம் செய்து வரு­வது வழ­மை­யா­க­வுள்­ளது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இடம்­பெற்ற தேர்­தலில் முக்­தாடா அல் சாட்ரின் செய்ரூன் கூட்­ட­மைப்பு  மொத்தம் 54  ஆச­னங்­களை வென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில்  இந்த மேற்­படி வெடிப்புச் சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர்  மேற்­படி தேர்­த­லி­லான  வாக்­கு­களை மீள முழு­மை­யாக  எண்­ணு­வ­தற்கு ஆத­ர­வாக பாராளுமன்றம் வாக்களித்திருந்தது. 

அத்துடன்  பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தத் தேர்தலை கண்காணிப்பதில் ஈடுபட்ட சுயாதீன  தேர்தல் ஆணையகத்தைச் சேர்ந்த 9  உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52