தன்னைத் திரு­மணம் செய்து 27வருட கால­மாக  தன்­னுடன் இணை பிரி­யாது  வாழ்ந்த தனது கண­வரை விடவும் தன்னால் மீட்­கப்­பட்டு வளர்க்­கப்­பட்டு வந்த நாய்­களே பெரி­தெனக் கருதி  தனது கண­வ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெற  மனை­வி­யொ­ருவர்  தீர்­மா­னித்த விநோத சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

சப்போக்  பிராந்­தி­யத்தில் பம்ஹாம் எனும் இடத்தைச் சேர்ந்த லிஸ் ஹஸ்லாம் (49  வயது) என்ற  பெண்ணே   தனது  கண­வ­ரான மைக்கை  (53  வயது)  விடவும்  நாய்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து  கண­வ­ரி­ட­மி­ருந்து  விவா­க­ரத்துப் பெற்­றுள்ளார்.

நாய்கள் மீது அபி­மானம் கொண்ட லிஸ் அநா­த­ர­வாகத் திரிந்த 30  நாய்­களை  மீட்­டெ­டுத்து தனது செல்லப் பிரா­ணி­க­ளாக  வீட்டில் வளர்க்க ஆரம்­பித்­தி­ருந்தார்.

ஆரம்­பத்தில்   இரு  படுக்கை அறை­களைக் கொண்ட தமது பண்ணை வீட்டில்  ஓரிரு நாய்­களை  அவர் வளர்த்தபோது அது தொடர்பில்  கண்­டு­கொள்­ளாது  இருந்த மைக்,  நாய்­களின் தொகை வீட்டில் பல்கிப் பெரு­கி­ய­தை­ய­டுத்து பொறுமையிழந்தார்.

இந்­நி­லையில் அவர் தனது மனை­வி­யிடம் நானா?  அல்­லது நாய்­களா  முக்­கியம் என  இரண்டில் ஒரு முடிவு எடுக்­கு­மாறு  எச்­ச­ரிக்கை விடுத்தார்.

இதன்­போது தனது நாய்­களை பிரிய விரும்­பாத லிஸ்  நாய்­களே பெரிது என திட்­ட­வட்­ட­மாகத்  தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து மைக் லிஸ்­ஸி­டமி­ருந்து  விவா­க­ரத்துப் பெற்­றுள்­ளார். 1991ஆம்   ஆண்டு  திரு­மண பந்­தத்தில் இணைந்த அந்தத் தம்­ப­திக்கு 22 வயதில் ஒரு மகன் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

லிஸ்ஸால் வளர்க்­கப்­படும் நாய்­களில் குறைந்­தது 15  நாய்கள் உடல் குறை­பா­டு­களைக்  கொண்­டுள்ளன. அந்த நாய்­களில் 5  நாய்கள் செவிட்டுத் தன்­மையைக் கொண்­டுள்­ள­துடன்  இரு நாய்கள்  தலா ஒரு கண்ணை மட்­டுமே கொண்­டுள்­ளன.  அதே­ச­மயம் ஒரு நாய் மூளைச் சேதத்­திற்­குள்­ளாகி  நிதா­ன­மற்ற நிலையிலுள்­ளது