“கோத்தா தரப்பு பெர்னாண்டோ புள்ளேக்கு வாக்களிப்பு ; பஷில் தரப்பு சிற்றுண்டிச் சாலையில் சதித் திட்டம்”

Published By: Priyatharshan

08 Jun, 2018 | 06:33 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதி சபாநாயகர் தெரிவில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ தரப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேக்கு வாக்களித்தனர். பஷில் ராஜபக்ஷ தரப்பினர் சிற்றுண்டி சாலையில் சதி திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். ஆகவே சுதந்திரக் கட்சியின் 16 குழுவினர் எதிரணிக்கு சென்ற பின்னர் எதிரணி பிளவுபட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் பலமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க எம்.பி கொண்டு வந்த நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

முன்னைய ஆட்சியின் போது அம்பாந்தோட்டையில் மாத்திரமே அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் எமது ஆட்சியில் கிராமம் புராவும் அபிவிருத்தி நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போதும் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் எந்தவொரு அபிவிருத்தியும் மக்களுக்கு தெரியவில்லை. அதன்பின்னரே அதிவேக பாதை உட்பட அனைத்தும் திறந்து வைக்கப்பட்டது.

அவ்வாறே எமது ஆட்சியிலும் தற்போது மூன்று வருடங்கள் அடிப்படை ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய அதிவேக பாதையின் நிர்மாண பணிகள் தற்போது குருநாகலில் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோன்று பேலியாகொடை தொடக்கம் புறக்கோட்டை வரையான மேம்பால நிர்மாண பணிகளும் இடம்பெற்று வருகின்றன. ஆகவே இன்னும் ஒரு மாதத்தில் கிராம மாற்றம் என்ற நாமத்தில் துரித கிராம அபிவிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.

எனினும் தற்போது பிரதி சபாநாயகர் தெரிவின் போது கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின் போது சுதர்ஷினி பொர்ணான்டோ புள்ளேவுக்கு கோத்தாபய  ராஜபக்ஷ தரப்பினர் வாக்களித்தனர். பஷில் ராஜபக்ஷ தரப்பினர் சிற்றுண்டிச் சாலையில் சதித் திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். ஆகவே சுதந்திரக் கட்சியின் 16 குழுவினர் எதிரணிக்கு சென்ற பின்னர் எதிரணி பிளவுப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் பலமாகியுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19