திறைசேரி பிணை முறி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸின் நிறுவனமொன்றிடமிருந்து இராஜாங்க அமைச்சர் 3மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை பெற்றுள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அந்த பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்ட காசோலையை தான் வங்கியில் வைப்பிலிட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சரிடமும் முன்னாள விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.