இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவியாக செயற்பட்டு வருகின்றார். மிதாலி ராஜ், அனைத்த வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும்  சிறந்த மகளிர் துப்பாட்ட வீராங்கனையாக கருதப்படுகின்றார்.

இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனையொன்றை தற்போது படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகியக் கிண்ண லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23ஓட்டங்களை பெற்றபோது, சர்வதேச டஇருபதுக்கு - 20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். 

இதுவரை  73 இருபதுக்கு -20 போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி,  2 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில், சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) 2,605 ஓட்டங்களையும் ஸ்டெபானி டெய்லர் (மேற்கிந்தியத்தீவுகள்) 2,582 ஓட்டங்களையும் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 

இதேவேளை, சர்வதேச ரீதியில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 7 ஆவது வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார் மிதாலி ராஜ்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் பெண் எனும் சாதனையைப் படைத்துள்ளார். 

இவர் ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு முறை அரைச்சதம் அடித்த முதல் வீராங்கனை ஆவார். மேலும் அதிகமுறை 50 ஓட்டங்களைப்பெற்ற வீராங்கனை எனும் சாதனையையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.