ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் டி.கே.டபிள்யூ பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் டி.கே.டபிள்யூ பகுதி  நீரில் முழ்கியுள்ளது.

இன்று பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் பனிமூட்டம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சில நேரம் வாகன நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.