வவுனியா சிறைச்சாலையில் பாரிய இட நெருக்கடி காணப்படுவதனால் கைதிகளுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா சிறையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களில் தொடர்புபட்டவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். 

இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதிவாய்ப்புகளே உள்ளது. ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில்  சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், சில சமயங்களில் 300 க்கும் மேற்பட்ட கைதிகளையும் அடைத்து வைத்திருப்பதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி  ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். 

இந்த மோசமான இட   நெருக்கடி காரணமாக ஏனைய  அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை தற்போது தோன்றியுள்ளது. இதனால் கைதிகள் விலங்குள் போல்  நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.