நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து மைக் ஹெஸன் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

 

தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புவதால் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பதற்கு இன்னும் இரு ஆண்டுகள் வரை ஒப்பந்தமுள்ளது.

இதேவேளை மைக் ஹெஸனுடைய இராஜிநாமா செய்வதற்கான முடிவை நியூசிலாந்து கிரிக்கெட்  ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதியிலிருந்து அவரது இராஜிநாமா அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.