(நா.தினுஷா)

தென்மேல் பருவ மழையினால் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று நிலவுவதுடன் குறித்த சில கடற்கரைபிரதேசங்களில் கடலலை கொந்தலிப்புடன் காணப்படும். அத்தோடு இன்றும் நாட்டின் சில பிரதேசங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மல்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இன்று இரத்தினபுரி உள்ளிட்ட நுவரெலியா, கேகாலை, கண்டி போன்ற மாவட்டங்களில் கடும் மழைபெய்யகூடும் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது. 

இது தொடர்பில மேலும் தெரியவருவதாவது, 

தென்மேற்கு பருவமழை காரணமாக நாடுபூராகவும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. சூழவுள்ள கடற்கரை பகுதிகளிலும் எதிர்வரும் சில தினங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு  மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையினை அவதானிக்க கூடியதாக இருக்கும். 

குறிப்பாக எதிர்வரும் சில தினங்களுக்கு சப்ரகமுவ, மேல் மற்று மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான கடும் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் , மத்திய, வட, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணம் மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளில் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். 

கடற்கரைபிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். புத்தளம் தொடக்கம் கொழும்ப வரை மற்றும் காலியினூடாக பொத்துவில் வரையிலான கடற்கரை பிரதேசங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை நிலவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

நாட்டை சூழவுள்ள கடற்கரை பிரதேசங்களின் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 35 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வேகம் காணப்படுவதுடன் புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன் துறை வரை மற்றும் அம்பாந்தோட்டையினூடாக பொத்துவில் வரையான கடற்கரை பிரதேசங்களில காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 60- 70   அதிகரிக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில்  கடலலை உயர்வடைவடையும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் பாதுகாப்புடன் செய்றபட வேண்டும். 

அதேபோன்று இன்று இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தறை, மாத்தளை, கேகாலை, கண்டி மற்றும் களுதுறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.