ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நேற்று ஒட்சிசன் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்வம் இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் கசிவு காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுக்கும் வகையில், தங்கல்லை மற்றும் வீரவில விமானப்படை முகாம்களின் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ஒட்சிசன் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தீ பரவலோ அல்லது வேறு அனர்த்தங்களோ இதுவரை பதிவாகவில்லை என்றாலும்  தொடர்ந்தும் வைத்தியசாலையின் குறித்த பகுதியில் ஒட்சிசன் குழாயில் கசிவு காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியிலிருந்து நோயாளர்கள் மற்றும் பணியாளர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.